சலார் டிரைலர் சாதனை!
சலார் திரைப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.
கேஜிஎஃப் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது.
இதையும் படிக்க: அமீர் கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித்!
இந்நிலையில், டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.