முகப்பு
செய்திகள்

ரூ.500 கோடி வசூலித்தது அனிமல்!

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் ரூ.500 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
பகிர்:

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

அனிமல் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், உலகளவில் இப்படம் ரூ.527 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.