கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

DIN

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிச.8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்து வெளியான ஜப்பான் திரைப்படம்,  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் டிச. 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் வருகிற டிச.8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது.

மிக்ஜம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதன் வெளியீட்டை வருகிற டிச.14 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.

இதையும் படிக்க: கேஜிஎஃப் - 3 கதை தயார்!

மேலும் சமக் வெப் தொடர் நாளை(டிச. 8) சோனி லைவிலும், மா ஊரி பொலிமேரா திரைப்படம் இன்று(டிச. 7)ஆஹா ஓடிடியிலும் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT