முகப்பு
செய்திகள்

இணையத்தில் கசிந்த எஸ்கே - 21 படக்காட்சி!

சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
பகிர்:

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது.

தற்போது, சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

‘எஸ்கே 21’ எனத் தற்காலிக பெயரில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்தது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. தொடர்ந்து, அக்காட்சி இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →