செய்திகள்

கங்குவாவிலும் பாபி தியால்!

அனிமல் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பாபி தியால் கங்குவா படத்திலும் நடித்து வருகிறார்.

DIN


சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி(நடராஜ்) நடிக்கின்றனர். 

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த டீசர் இதுவரை யூடியூப்பில்

மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் விஎஃப்எக்ஸ் பணிகளையே நம்பி உள்ளதால் அதற்கான குழு கடுமையாக உழைத்து வருகிறது. தமிழில் இதுவரை வெளியான படங்களிலேயே சிறப்பான விஎஃப்எக்ஸ் தரம் கொண்ட படமாக இது இருக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களாம்.

இந்நிலையில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியால் கங்குவா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து கூறியவர், “ கங்குவாவில் நடித்து வருகிறேன். நடிகர் சூர்யா மிகவும் அர்பணிப்பு கொண்ட சிறந்த நடிகர். இயக்குநர் சிவா இனிமையானவர். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் பேசப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT