செய்திகள்

ஓடிடியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இதையும் படிக்க: மறுவெளியீடான 3 படங்கள்!

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன.

உலகளவில் இப்படம் ரூ.70 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT