செய்திகள்

வெளியானது அமீரின் ‘மாயவலை’ டீசர்!

இயக்குநரும் நடிகருமான அமீர் நடிப்பில் உருவாகியுள்ள மாயவலை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல இயக்குனர் அமீர், பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதேசமயம் கடந்த 2009இல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார். தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

பருத்திவீரன் தொடர்பாக ஞானவேல்ராஜாவுக்கும் அமீருக்கும் பிரச்னைகள் சமீப காலமாக தீவிரம் அடைந்தது. அமீருக்கு ஆதரவாக பல இயக்குநர்கள் குரல் கொடுத்தனர்.  அவர்கள் அனைவருமாக இணைந்து படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாயவலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இந்தப் படத்தினை வெளியிடுகிறார். 

படத்தின் டீசரை இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகள் சொல்வது என்ன?

கொடைக்கானலில் பனிப் பொழிவு மீண்டும் அதிகரிப்பு

பட்ஜெட் தினத்தில் ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

தக்கோலம் அருகே ரூ.17.65 கோடியில் உயா்நிலை மேம்பாலப் பணி: அமைச்சா் காந்தி அடிக்கல் நாட்டினாா்!

பழனியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT