நடிகர் மதுரை மோகன் (கோப்புப் படம்) 
செய்திகள்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

தமிழில் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் மதுரை மோகன். 

DIN

பல்வேறு திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவால் இன்று (டிச. 10) காலமானார். 

தமிழில் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் மதுரை மோகன். 

அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். 

மதுரையைச் சேர்ந்த இவர், உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மதுரை மோகன் மறைவுக்கு சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT