செய்திகள்

சீரியல் நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி! 

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். 

DIN

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் இவரது நகைச்சுவைக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 

டாக்டர் படப்பிடிப்பில்...

நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமான இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற ஜெயிலர், மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த அன்னபூரணி, கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படக்கள் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வருகிறார். 

46 வயதான ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. சீரியல் நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அரண்மனை கிளி, திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடிகை சங்கீதா நடித்துள்ளார். 

நடன் இயக்குநர் சதீஷ் தனது எக்ஸ் பதிவில், “இது எந்தப் படத்தின் படப்பிடிப்பும் அல்ல; நிஜமாகவே கல்யாணம் நடந்து விட்டது. வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. பிளாக்பஸ்டர் வாழ்க்கை அமைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT