புதிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சாதாரணம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, நன்றாக இருந்தும் கவனிக்கப்படாத திரைப்படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனால் படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. நட்சத்திர நடிகர்களின் பிறந்தநாளுக்கு மட்டுமே அவர்கள் நடிப்பில் உருவான பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மறுவெளியீட்டிலும் பல படங்கள் வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் மெருகூட்டலுடன் தைரியமாக படங்களை வெளியிடுகின்றனர்.
இதையும் படிக்க: இவ்வளவு நெருக்கமான காட்சியில் நடித்திருக்கக் கூடாதென பெற்றோர்கள் வருந்தினார்கள்: அனிமல் பட நடிகை
நடிகை மீனா முத்து படம் பார்த்து நெகிழ்ச்சியடைந்தார்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த முத்து, வித்தியாசமான முயற்சியில் கவனம்பெற்ற கமல்ஹாசனின் ஆளவந்தான் படமும் டிச.8ஆம் தேதி வெளியாகின.
இதையும் படிக்க: குடும்பத்திலுள்ள அனைவரது இதயத்தையும் தொடும்: ஹாய் நான்னா படத்தினை பாராட்டிய அல்லு அர்ஜுன்!
வசூலில் நடிகர் கமல்ஹாசன், ரஜினியை முந்தியுள்ளார். ஆளவந்தான் ரூ.15 இலட்சமும் முத்து ரூ.7 இலட்சமும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமல்ஹாசனின் படங்கள் காலம் தாண்டி நிற்கும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.