செய்திகள்

வெளியானது குண்டூர் காரம் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ!

நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

DIN

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். நடிகைகள் ஸ்ரீ லீலா, பூஜா ஹக்டே, நடிகர் ஜகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இருந்தது.  

இந்தப் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியானதும் பின்னர் பூஜா ஹெக்டே மட்டும் விலகியதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீ லீலா உடன் மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் முதல் பாடலான தம் மசாலா பாடல் வெளியாகியுள்ளது. பிரியாணி குறித்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்தப்பாடல் ரசிகர்களிடையே கவன்ம் பெற்று வருகிறது. 

இந்நிலையில் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT