செய்திகள்

அஜர்பைஜானில் நடிகை ரெஜினா: விடாமுயற்சி படத்துக்காகவா?

நடிகை ரெஜினா  தான் அஜர்பைஜான் சென்றுள்ளதாக புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 

DIN

கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்’ என்ற படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞசம் மறப்பதில்லை படத்தில் ரெஜினாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார். ஓடிடியிலும் இவரது படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்  அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

ஏற்கெனவே, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பில் ரெஜினா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், நடிகை ரெஜினா தனது இன்ஸ்டாகிராமில் அஜர்பைஜானில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதனால் இவர் நிச்சயமாக விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக இணையத்தில் அஜித் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

ரெஜினா நடித்துள்ள சூர்ப்பனகை, பிளாஷ்பேக், பார்டர், செக்ஸன் 108 ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT