எதிர் நீச்சல் படத்தில் சதீஷின் நகைச்சுவை மிகவும் கவனம் பெற்றது. பிறகு கத்தி, மான் கராத்தே, ஆம்பள ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டது.
நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கும் முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: கல்யாணத்தில் அழுத ஜவான் பட நடிகை!
'கான்ஜூரிங் கண்ணப்பன்' படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் சதீஷ், “நகைச்சுவை நடிகன் நல்ல பன்ச் லைன்களை சொல்ல வேண்டும். சொன்னதையே சொல்லாமல் புதியதாக சொல்ல வேண்டும். எங்களது பள்ளியில் சங்கீதாவை 'சங்கூதுற வயசுல சங்கீதா' என கிண்டல் செய்தோம். அப்போது அதன் வீரியம் தெரியவில்லை. அந்த வார்த்தை அவரை எவ்வளவு நோகடித்திருக்குமென புரிகிறது. இபோதெல்லாம் ரசிகர்களும் இதை விரும்புவதில்லை. என்னுடைய படங்களில் உருவ கேலி குறித்த நகைச்சுவைகளை செய்வதில்லை. அதற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.