முகப்பு
செய்திகள்

வானத்தைப்போல தொடர் நாயகிக்கு விரைவில் திருமணம்!

வானத்தைப்போல தொடரில் நடித்த ஸ்வேதாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
பகிர்:

வானத்தைப்போல தொடரில் நடித்த ஸ்வேதாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல தொடர் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக வானத்தைப்போல தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடித்து வந்தார். இவர் இத்தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 

ஸ்வேதா.

இந்த தொடரிலிருந்து ஸ்வேதா திடீரென விலகினார். அவருக்கு பதிலாக பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மான்யா நடித்து வருகிறார். 

இதைத் தொடர்ந்து நடிகை ஸ்வேதா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில், ஸ்வேதாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விரைவில் திருமணம் நடைபெறவுள்ள ஸ்வேதாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →