அஜித்துடன் ஆரவ்!
அஜித்தின் விடாமுயற்சி திரைப்பட படப்பிடிப்பில் ஆரவ் கலந்துகொண்டுள்ளார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் ராதிகா சரத்குமாரின் தொடர்!
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஆரவ் கலந்துகொண்டதுடன் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.