செய்திகள்

ஏ சான்றிதழுடன் வெளியாகும் ஃபைட் கிளப்!

விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

DIN

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 

உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

கடந்த டிச.2 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்'  படத்தின் டீசரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் டீசரின் இறுதியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இளையராஜாவின் ’என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலின் பின்னணி இசையை அடிதடி காட்சிகளுடன் சேர்த்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், ஃபைட் கிளப் படத்தில் அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், ஆக்சன் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

டீசர் மூலம் யூடியூப்பில் 3.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

கடல் பயணம்... கௌரி வினீத்!

ஒவ்வொரு பார்வையிலும் கம்பீரம்... ரூமா சர்மா!

SCROLL FOR NEXT