முகப்பு
செய்திகள்

துபையில் இன்று மாலை வெளியாகும் போட் படத்தின் டீசர்!

சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  இவர் புலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கிவர்.

இவர் போட் என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.  கடலில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் துபையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட் படத்தின் டீசரை 5 முக்கிய பிரபலங்கள்  வெளியிடுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →