செய்திகள்

ஃபைட் கிளப் வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஃபைட் கிளப் திரைப்படத்தின் முதல் வார வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடித்துள்ள படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிட்டார். 

மாஸ் ஆக்சன் படமாக உருவான 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

கடந்த டிச. 15 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் முதல் வார வசூலாக ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT