’ஓ மை கடவுளே’ இயக்குநர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்!
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.
தற்போது, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: நாயகனா? வில்லனா? சிறுவனைக் கொன்ற வீரப்பன்!
இந்நிலையில், இப்படத்திற்குப் பின் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.