ஸ்வாதிகா 
செய்திகள்

சக்தி ஐ.பி.எஸ்., ..புதிய தொடரில் நாயகியாகும் யூடியூப் பிரபலம்!

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்வாதிகா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார்

DIN

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்வாதிகா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். சக்தி ஐ.பிஎ.ஸ்., என்று பெயரிடப்பட்டுள்ள தொடரின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

சக்தி ஐ.பிஎ.ஸ். தொடர் எந்தத் தொலைக்காட்சி உரிமம் பெறுகிறது, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் விரையில் வெளியாகவுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் நடிகை ஸ்வாதிகா துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

யூடியூப் பிரபலமான ஸ்வாதிகா, பல்வேறு குறும்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்தவர். விளம்பர மாடலாகவும் வலம் வரும் ஸ்வாதிகா, சரத்குமாருடன் பரம்பொருள் திரைப்படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது சக்தி ஐ.பிஎ.ஸ். என்ற தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்வாதிகா. சின்னத்திரையில் நடிக்கவந்த சில மாதங்களிலேயே நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

இதனால், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சக்தி ஐபிஎஸ் தொடர் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி மற்றும் நேரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT