செய்திகள்

ஒருகாலத்தில் மது போதையிலேயே இருந்தேன்: ஸ்ருதி ஹாசன்

மது பழக்கத்திலிருந்து மீண்டது குறித்துப் பேசியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

DIN

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடத்து வருகிறார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசன், “நான் மது அருந்துவதை விட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன் நண்பர்களுடன் இணைந்து குடிப்பது அன்றாட பழக்கமாக இருந்தது. ஆனால், எனக்கு வேறு எந்த போதைப் பொருள் பழக்கமும் இல்லை.  நீங்கள் குடிக்காதபோது பார்டிகளில் பிறரைப் பொறுத்துக்கொள்வது கடினம். ஒருகட்டத்தில், குடிக்கும் நண்பர்களிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். தற்போது, நிதானமாகவே இருக்கிறேன். குடியைவிட்டு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால், எனக்கு எந்த வருத்துமும் தலைவலியும் (ஹேங் ஓவர்) இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT