செய்திகள்

ஃபைட் கிளப்: வியூகம் பாடல் விடியோ!

ஃபைட் கிளப் படத்தின் வியூகம் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடித்துள்ள படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிட்டார். 

மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவான 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியது. 

கடந்த டிச.15-ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இப்படம் முதல் வார வசூலாக ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வியூகம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அசல் கோளார் இந்தப் பாடலை எழுதி பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!

நீதித் துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆா்டி புத்தகத்துக்குத் தடை! அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு

மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT