செய்திகள்

இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 9 படங்கள்!

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மூன்று திரைப்படங்களும், நாளை மறுநாள் 6 திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.

DIN

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மூன்று திரைப்படங்களும், நாளை மறுநாள் 6 திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்கி’ திரைப்படம் நாளை(டிச.21) வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தில் விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், அனஸ்வரா ராஜன், பிரியாமணி, சித்திகி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நேரு’ திரைப்படம் நாளை(டிச.21) வெளியாகவுள்ளது.

கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் பிருத்வி ராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள சலார் திரைப்படம் வெள்ளிக்கிழமை(டிச.22) வெளியாகவுள்ளது.

சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சபாநாயகன் திரைப்படம் வெள்ளிக்கிழமை(டிச.22) வெளியாகவுள்ளது. இந்தாண்டு உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசிப் படம் சபாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி முருகையா இயக்கத்தில் வித்தார்த், அருந்ததி நாயர் நடித்துள்ள ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் வெள்ளிக்கிழமை(டிச.22) வெளியாகவுள்ளது. 

மேலும், ரேகாவின் மிரியம்மா, ஜிகிரி தோஸ்த், அரணம், ஹாலிவுட்டின் அக்வாமேன் உள்ளிட்ட திரைப்படங்களும் வெள்ளிக்கிழமை(டிச.22) திரைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து கட்சிக் கூட்டம்! தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிப்பு! | DMK | SIR

பிக் பாஸ் 9: இதுதான் உங்கள் தராதரமா? திவாகரை எச்சரித்த விஜய் சேதுபதி

இது எதிர்காலத்திற்கு ஆபத்து: நிவேதா பெத்துராஜ்

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மீன்பிடித்த ராகுல் காந்தி

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

SCROLL FOR NEXT