செய்திகள்

பிக்பாஸில் விசித்ராவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொண்டுள்ள நடிகை விசித்திராவின் ஒருநாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நீண்ட காலமாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த பிரபல நடிகை விசித்ராவும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

தற்போதைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில், மிகவும் வயதான போட்டியாளராக விசித்ரா உள்ளார். ஓரிரு வாரங்களில் பிக் பாஸிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 75 நாள்களை கடந்தும் போட்டியில் நீடித்து வருகிறார். ரசிகர்களின் பேராதரவும் விசித்ராவுக்கு உள்ளது.

சில நாள்களுக்கு முன் தனக்கு நிகழ்ந்த பாலிய தொல்லை குறித்து அவர் பேசியது வைரலானது. 

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே  அதிக சம்பளம் பெறுபவராக விசித்ரா இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இப்போட்டியில் ஒருநாள் சம்பளமாக அவர் ரூ.40 ஆயிரம் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை மாயா ரூ.25 ஆயிரமும் ரவீனா ரூ.15 ஆயிரமும் பெறுவதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT