விரைவில் சர்தார் - 2 படப்பிடிப்பு!
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால், படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இதையும் படிக்க | பிக்பாஸ் வெற்றியாளர் கைது!
சமீபத்தில் இப்பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி.எஸ்.மித்ரன் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படப்பிடிப்புக்கான முதல்கட்ட பணிகளை இயக்குநர் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி மார்ச் மாதம் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பொருள் செலவில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்!