செய்திகள்

போலியான பெண்ணியவாதிகளை நினைத்து எனக்கு பயமில்லை: அனிமல் பட இயக்குநர் விளக்கம்!

DIN

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் படம் ரூ. 862 கோடி வசூலித்துள்ளது. 

சில விமர்சகர்கள் அனிமல் படம் பெண்களுக்கு எதிரான படமென விமர்சித்தார்கள். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை கிளப்பியது. அர்ஜுன் ரெட்டி படம் முதலே சந்தீப் வங்கா படத்துக்கு இந்தப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சந்தீப் வங்கா பதிலளித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: 

ரன்பீர் கதாபாத்திரம் (ரன்விஜய்) ஆணாதிக்க மிக்கதாக பலரும் கூறுகிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. 20, 30 ஜோக்கர்களை தவிர அனிமல் படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. படத்தில் இல்லாதது மட்டுமின்றி தவறாக புரிந்துக் கொண்டு படத்தினை மக்களுக்கு தவறாக பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் போலியான பெண்ணியவாதிகள். எனக்கு அவர்களைப் பற்றி கவலை இல்லை. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 

ரன்பீர் ராஷ்மிகாவின் பிரா ஸ்ட்ரிப்பினை இழுக்கும் காட்சியை பலரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதற்கு முன்பு உப்பினை அதிகமாக இட்டு பரிமாற கொடுத்த ராஷ்மிகாவின் செயலுக்கு மிகவும் மனம் உடைந்து விடுவான். 'இனிமேல் உப்பு போடாதே விஷம் இருந்தால் வைத்து விடு' என்பான். அதைத் தொடர்ந்து வரும் காட்சியே அது. ராஷ்மிகாவுக்கு இன்னொரு ஆணை திருமணம் செய்ய அவர்களது அம்மா முடிவெடித்திருப்பதும் அவனுக்கு உடல், மன ரீதியாக அந்த நேரத்தில் அனுபவித்து வருவதும் அதிகம். 

ஜோயா கதாபாத்திரம் அவனை ஏமாற்றி உளவு பார்த்து அவர்களது குடும்பத்தை கொல்ல வந்திருக்கிறாள். ஏமாற்றுபவர்கள் காதலிப்பதாக கூறினால் அந்த நேரத்தில் ஒருவன் அதை நிரூபிக்க எது முடியாதோ அதைதான் செய்ய சொல்லுவான். அதற்கும் உடனே இந்த போலியான பெணியவாதிகள் அவமரியாதை செய்துவிட்டதாக எழுதுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது. எனக்கு அந்த ஜோக்கர்களை பார்த்து பயமில்லை எனக் கூறினார். 

அனிமலுக்கு அடுத்து பிரபாஸை வைத்து ஸ்பிரிட் எனும் படத்தினை சந்தீப் இயக்க உள்ளார். அதற்கடுத்து அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

SCROLL FOR NEXT