மீண்டும் தொடரில் நடிகை சுகன்யா!
நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகன்யா, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘புது நெல்லு, புது நாத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின், 'சின்ன கவுண்டர்’, ‘கோட்டை வாசல்’, ‘இந்தியன்’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் சில படங்களில் நாயகியாக சுகன்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் டிஎன்ஏ என்கிற மலையாளப் படத்தில் தமிழ்ச் சூழல் கொண்ட பாடல் ஒன்றை சுகன்யா எழுதியிருந்தார்.
Advertisement
Advertisement
சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ஆனந்தம் தொடர் பெரிய வெற்றியடைந்தது. இத்தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். பின்னர், ஜன்னல் என்ற தொடரில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு வரை ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்ற இவர், 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார்.
நடிகை சுகன்யா புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீண்டும் தொடரில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மணிகண்டனின் லவ்வர் படத்தின் முக்கிய அறிவிப்பு
இவர் நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.