செய்திகள்

யுவன் குரலில் வெளியான மாயவலை படத்தின் முதல் பாடல்!

அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அமீர் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2009-ல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் அமீர் நடித்திருந்தார். இவர், மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைப் பிறகு அமீர் கதாநயாகனாக நடிக்கும் திரைப்படம் மாயவலை. இந்தப் படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இந்தப் படத்தினை வெளியிடுகிறார். இப்படத்தின் டீசரை வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், மாயவலை படத்தின் முதல் பாடலான 'வாழ்க்கை ஒரு மாயவலை' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இப்பாடலுக்கான வரிகளை சினேகன் எழுதியுள்ளார். இப்பாடலை யுவன்சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT