செய்திகள்

மூன்றே நாளில் ரூ.400 கோடியை தாண்டிய சலார்!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அசத்தி வருகிறது. 

DIN

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இணைந்து டிரைலர் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.  காந்தாரா நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் சலார் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்கள். 

முதல்நாளில் சலார் ரூ.178.7 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுதான் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2வது நாளில் ரூ.295.7 கோடியும் வசூலானது. தற்போது 3வது நாலில் ரூ.402 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT