செய்திகள்

காஜல் பசுபதிக்கு 2-வது திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய காஜல் பசுபதி, பின்னர் தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சிந்துபாத் தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், இவர் பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பெரிய திரையில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கள்வனின் காதலி, கோ, சிங்கம், இரும்பு குதிரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடன இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்ட காஜல் பசுபதி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இருவருக்கும் விவகாரத்தான நிலையில், சாண்டி வேறொருவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. காஜல் பசுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “இரண்டாவது திருமணம் முடிந்தது. திடீர் முடிவு. யாருக்கும் சொல்லமுடில” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பழையது என்றும், நம்பமுடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட நபர் குறித்த விவரத்தை காஜல் பசுபதி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT