செய்திகள்

நயன்தாராவின் அன்னபூரணி: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

DIN

வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு இறுதி வாரத்தில் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தின் நயன்தாராவின் 75-வது படமான அன்னபூரணி திரைப்படத்தில், ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம்  நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் டிச.29 ஆம் தேதி வெளியாகிறது.

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படம் வரும் டிச.30 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் மங்களவாரம் திரைப்படம் தமிழில், செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் டிச. 31-ல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியான திரைப்படம் 12த் ஃபெயில்.  இப்படம் டிச. 29-ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

விஜய் டிவி புகழ் ராஜலட்சுமியின் சைலன்ஸ் திரைப்படம் டிச.29-ல் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் படை

தேனியில் பலத்த மழை

மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

கம்பத்தில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது

கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: உடலை வாங்க 3-ஆவது நாளாக உறவினா்கள் மறுப்பு

SCROLL FOR NEXT