முகப்பு
செய்திகள்

’மன்னித்து விடுங்கள் அண்ணா..’ : அழுதபடி விடியோ வெளியிட்ட விஷால் !

விஜயகாந்த் மறைக்கு நடிகர் விஷால் கண்ணீருடன் தன் இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார்.

Updated On : 28 டிசம்பர், 2023 at 2:51 PM
பகிர்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த் மறைக்கு வருத்தத்தைப் பதிவிட்டுள்ளனர். 

முக்கியமாக, பல துணை நடிகர்கள் நேரில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உருக்கமாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விஷால் கண்ணீருடன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " பசியோடு வந்தால் உணவிட்டு அனுப்புவீர்கள். இந்த சமுதாயத்துக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்தீர்கள். நாங்கள் நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் உங்களைச் சந்திக்க வந்தபோது ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருந்தீர்கள். ஒரு மனிதராக நல்ல பெயரைச் சம்பாதிப்பது பெரிய விசயம். இந்நேரம் அருகில் இருந்து உங்கள் காலைத் தொட்டு வணங்கியிருக்க வேண்டும். ஆனால், என்னால் முடியவில்லை. இதற்காக என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா’ என உருக்கமாகக் கண்ணீருடன் பேசிய விடியோவைப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.