எழுத்தாளர் நரன், சசிகுமார் 
செய்திகள்

பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

கதை திருட்டு விவகாரத்தில் நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம் சிக்கலை சந்தித்துள்ளது.

DIN

கதை திருட்டு விவகாரத்தில் நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம் சிக்கலை சந்தித்துள்ளது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’.

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இதில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரைப் பகிர்ந்த எழுத்தாளர் நரன் ‘படத்தின் கதை, தான் எழுதிய ‘வாரணாசி’ என்கிற சிறுகதையைப் போல் இருப்பதாகவும் இதற்காக எந்த உரிமமும் தன்னிடம் பெறப்படவில்லை’ என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதேநேரம் , ‘அயோத்தி’ படத்திற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளதால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சமீப காலமாக கவனிக்கப்படும் எழுத்தாளராக நரன் உள்ளார். ’கேசம்’, ‘சரீரம்’ ஆகிய இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் கவனத்தை பெற்றன. மேலும், ‘சால்ட்’ என்கிற பதிப்பகமும் நடத்தி வருகிறார்.

இயக்குநர் சுதா கொங்காரா நரனின் காதல் கதை ஒன்றை இணையத் தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT