செய்திகள்

‘வட சென்னை 2 எப்போது?’- தனுஷ் பதில்! 

வட சென்னை இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார். 

DIN

2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் சிலர் நடித்து விமரசனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் வட சென்னை. லைகா, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தினை இயக்கி முடித்துள்ளார். பின்னர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படமெடுக்க உள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் வட சென்னை 2 பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தனுஷ், “இதற்கு வெற்றிமாறன் சார் ஆபிசில்தான் கேட்க வேண்டும். ஆனால் நிச்சயமாக வட சென்னை2 நடக்கும். விரைவில் எதிர்பார்க்கலாம்” என பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT