செய்திகள்

நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த அப்டேட்! 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது.

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு மனம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து. ஆனால் படம் மீண்டும் எப்பொழுது துவங்கும் என்பது தெரியாமல் இருந்தது. 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதேபோல் விகரம் நடித்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி பெற்றது. விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் துருவநட்சத்திரம் பற்றி கூறியுள்ளார். இந்தப்படம் இன்னும் 10 படங்கள் எடுக்கும் அளவுக்கான கதைக்களத்தை கொண்டது. இந்தப் படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. 

சோனி தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்” என கூறியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT