செய்திகள்

'40 வயசு ஆகப்போகுதுன்னு பயமா இருக்கு..’: தனுஷ்

தன் வயது குறித்து நடிகர் தனுஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

DIN

தன் வயது குறித்து நடிகர் தனுஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் தனுஷ் ‘வாத்தி கதை 1990-களில் நடைபெறும் வகையில் உருவாகியுள்ளது. 90-களில் நான் ஒரு மாணவன். இப்படத்தில் அந்த காலத்தின் மாணவர்களின் பேராசியராக நடித்துள்ளேன். காலம் வேகமாக ஓடுகிறது. வருகிற ஜூலை மாதத்துடன் எனக்கு 40-வயது நிறைவடைகிறது. நினைத்தால் ரொம்ப பயமாகவும் இருக்கிறது. கல்வியை வியாபாரமாக மாற்றக்கூடாது என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. படிக்கும் மாணவர்கள் எல்லாருக்கும் வாழ்க்கையின் முக்கியத்துவம் படிப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

ஆபத்தை ஏற்படுத்தும் க்ரீம்கள்! சருமப் பராமரிப்புக்கு இந்த 3 மட்டுமே போதும்!

வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து! உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

90 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT