தாம்சன் / பாலா 
செய்திகள்

புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் கவனம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. முழுக்க முழுக்க நகைச்சுவை பொழுதுபோக்குக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. 

DIN

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் கவனம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கப்போவது யாரு'. முழுக்க முழுக்க நகைச்சுவை பொழுதுபோக்குக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 

நகைச்சுவை திறன் கொண்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், வாரம் ஒரு முறை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், பங்கு பெற்ற பலர் தற்போது வெள்ளித் திரை நட்சத்திரங்களாக மின்னுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' (கேபிஒய் சாம்பியன்ஸ்) என்ற நிகழ்ச்சியையும் விஜய் தொலைக்காட்சி தயாரித்து வருகிறது. அந்தவகையில், 4வது பருவமாக இந்த நிகழ்ச்சி தற்போது புதுப்பொலிவுடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சி ஞாயிறு பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், தாடி பாலாஜி, மதுரை முத்து, ரேஷ்மா பசுபுலேட்டி, குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா அர்ஜுன் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். அதன் புகைப்படங்களை ஸ்ருத்திகா அர்ஜுனும் பகிர்ந்துள்ளார். 

நகைச்சுவை கலைஞர்கள் பலர் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT