செய்திகள்

காஷ்மீரில் லோகேஷ் கனகராஜ் - வைரல் புகைப்படம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

மேலும், படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலானது. 

இந்நிலையில், காஷ்மீரில் படக்குழுவினருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதி!

மறக்க முடியுமா? சோபிதா துலிபாலா!

“கடந்த 2 ஆண்டுகளாக ஏன் ஆய்வு நடக்கவில்லை?” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

புதருக்குள் விழுந்த தனியார் ஜெட்! பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்! | UP

மந்தாரப்பூ... கரீனா கபூர்!

SCROLL FOR NEXT