முகப்பு
செய்திகள்

'மிருகம்போல...' யோகா பயிற்சியில் கீர்த்தி சுரேஷ்! (விடியோ)

இயற்கையோடு இயற்கையாக ஒன்றிப்போகும் வகையில், மிருகத்தின் செயல்பாடுகளை யோகாசனமாக செய்து விடியோ வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
யோகா பயிற்சியில் கீர்த்தி சுரேஷ்
பகிர்:

இயற்கையோடு இயற்கையாக ஒன்றிப்போகும் வகையில், மிருகத்தின் செயல்பாடுகளை யோகாசனமாக செய்து விடியோ வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

உடற்பயிற்சி மற்றும் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கீர்த்தி சுரேஷ், அவ்வபோது யோகா செய்யும் புகைப்படங்களையும், விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். 

உடல் மற்றும் மனதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக அவர் நாள்தோறும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். 

அந்தவகையில் தற்போது மிருகத்தின் செயல்பாடுகளை ஆசனங்களாக செய்து கீர்த்தி சுரேஷ் விடியோ வெளியிட்டுள்ளார். அதில், இயற்கையோடு ஒன்றாக மாறுதல் மற்றும் மிருகம் போன்ற செயல்பாடுகளை முதல்முறையாக வெற்றிகரமாக செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. நானியுடன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →