முகப்பு
செய்திகள்

வெளியானது ருத்ரன் படத்தின் 'பாடாத பாட்டெல்லாம்' பாடல்

ருத்ரன் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
பகிர்:

ருத்ரன் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். 

மேலும் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தரண்குமார் இசையில் உருவாகியுள்ள படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 60-களில் பிரபலமான ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடலின் ரீமேக்காக உருவாகியுள்ளது. நித்யஸ்ரீ பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.