நயன்தாராவின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்த படம் யாருடன் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சிற்றம்பலம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்தப்படம் திறமையான மற்றும் எனக்கு பிடித்தமான நடிகர் மாதவனுடன். பிரபலமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது” தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மித்ரன் ஜவஹர் இயக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து எந்தவித அதிகார்வபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நயன்தாரா நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் விஜய், ஷாருக்கான்?
தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்த நயன் தாரா, இதுவரை நடிகர் மாதவன் உடன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.