செய்திகள்

‘திருச்சிற்றம்பலம்’ இயக்குநரின் அடுத்த பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி! 

இயக்குநர் மித்ரன் ஆர்  ஜவஹரின் அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 

DIN

‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் ஆர்  ஜவஹர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத்.  

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மாதவன் அவர்களுடன் அடுத்த படம் எடுப்பேனென இயக்குநர்  பிப்.11ஆம் தேதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக நாயகன் ஈஷான் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை மாரிசெலவன் எழுதியுள்ளார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அரியவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

டேனியல் பாலாஜி, பிரணாளி கோக்ரே, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசை ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந். நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT