பெற்றோரிடம் கூட சொல்லக்கூடாது என்றார்கள்: அனுஷ்கா சர்மா பகிர்ந்த உண்மை!
இந்தப் படத்தின் மூலமாக நான் அறிமுகமாவது யாருக்கும் தெரியக்கூடாது என விரும்பினார் ஆதித்யா சோப்ரா
1970-ல், பாலிவுட் இயக்குநர் யாஷ் சோப்ரா தொடங்கிய நிறுவனம் - யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸைத் தற்போது யாஷ் சோப்ராவின் மகனும் இயக்குநருமான ஆதித்யா சோப்ரா நிர்வகிக்கிறார். இவர், ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தை இயக்கியவர்.
இந்நிலையில் யாஷ் சோப்ரா மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பற்றிய நான்கு பாகங்களைக் கொண்ட தி ரொமாண்டிக்ஸ் என்கிற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் யாஷ் சோப்ராவைப் பற்றியும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தியத் திரையுலகுக்கு அளித்த பங்களிப்பு பற்றியும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். ஸ்மிருதி முந்த்ரா இந்த ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்.
படிக்க: தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!
Advertisement
அனுஷ்கா சர்மா அளித்த பேட்டியில் ஷாருக் கானுடன் இணைந்து நடித்த ரப் நே பனா தி ஜோடி படம் பற்றி கூறியதாவது:
இந்தப் படத்தின் மூலமாக நான் அறிமுகமாவது யாருக்கும் தெரியக்கூடாது என விரும்பினார் ஆதித்யா சோப்ரா. எனவே படம் வெளிவரும் வரை இதுபற்றி யாருக்கும் தெரியாது. நான் தான் கதாநாயகி என்பதும் வெளியே தெரியக்கூடாது என்றார். படம் பற்றி நீ யாரிடமும் மூச்சுவிடக்கூடாது, உன் பெற்றோரிடம் கூட சொல்லக்கூடாது என்று ஆதித்யா சோப்ரா சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன் என்றார்.