செய்திகள்

இணையத்தை ஆக்கிரமிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்! 

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. பின்னர், ஜன.14 புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ’ரீவால்வர் ரீட்டா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியதும் குறிப்பிட்டத்தக்கது. 

நெட்பிளிக்ஸ் நடத்திய பிரம்மாண்ட விருந்தில் ஹிந்தி மற்றும் தென்னிந்தியத் திரையுலகினர் சனிக்கிழமை (பில்18) இரவு ஒன்று கூடி தரமான சினிமாவையும் ஓடிடி தளத்திற்கும் இடையே புதிதாக வளர்ந்த பிணைப்பைக் கொண்டாடினர்.

இந்தாண்டு 18 தமிழ்ப்படங்களை ஓடிடியில் வெளியிட உள்ளதாக நெட்பிளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்ட நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ், ஆமிர்கான், அனில் கபூர், ஜோயா அக்தர், ராஜ்குமார் ராவ், கிரிட்டி சனோன், ரகுல் ப்ரித்தி சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதில் நடிகை கீர்த்தியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கீர்த்தியின் உடையலங்காரம் மிகவும் அழகாக இருப்பதாகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT