செய்திகள்

’எல்லாமே உனக்காக அம்மா..’: ஜான்வி கபூர் உருக்கம்

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி அவரது மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி அவரது மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தமிழில் வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா பட ஹிந்தி ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி'யில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து சில ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியைத் தந்தன.

இதற்கிடையே, தமிழில் ஜான்வி கபூர் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இத்தகவலை மறுக்கும் விதமாக ஜான்வி கபூர் இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்(பிப்.24) நெருங்க உள்ளதால் ஜான்வி கபூர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அம்மா..இப்போதும் அனைத்து இடங்களிலும் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் உன்னை பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அது துவங்குவதும் முடிவதும் உன்னால்தான்..’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT