ஷாருக்கானின் பதான் திரைப்படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இதையும் படிக்க: ’எல்லாமே உனக்காக அம்மா..’: ஜான்வி கபூர் உருக்கம்
இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் இத்திரைப்படம் ரூ.1,000 கோடியை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆயிரம் கோடி வசூலித்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்கிற சாதனையை ‘பதான்’ பெற்றுள்ளது.
முன்னதாக, இப்படம் இந்தியாவில் ரூ.630 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.