வெங்கட் பிரபு-நாக சைதன்யாவின் 'கஸ்டடி' படத்தின் புதிய அப்டேட்!
இயக்குநர் வெங்கட் பிரபு- நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் கஸ்டடி திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர் என்பது சிறப்பான அம்சம். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அரவிந்தசாமி ஆகியோர் நடிக்கின்றனர்.
Advertisement
இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்தப் படம் இந்தாண்டு மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.