செய்திகள்

வெளியானது ‘பஹீரா’ படத்தின் 2வது டிரைலர்! 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பஹீரா படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. 

DIN

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள படம் ‘பஹீரா’. இந்தப் படத்தின் முதலாவது டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் 2வது டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

‘பஹீரா’ திரைப்படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT