செய்திகள்

5 பிரிவுகளில் விருது வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு! 

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்திற்கு 5 பிரிவுகளில் ஹெச்சிஏ விருது கிடைத்துள்ளது. 

DIN

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 5 பாடல்களில் ஒன்றாக நாட்டுக் கூத்து பாடலும் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. ஆஸ்கர் கிடைக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப்படத்திற்கு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் 5 பிரிவுகளில் ஹெச்சிஏ விருது (ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அவார்ட்)  கிடைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த ஆக்‌ஷன் படம், சிறந்த சண்டை காட்சிகள், ஸ்பாட்லைட் விருது, சிறந்த பாடலுக்காகவும் தேர்வு செய்து விருது கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ழிச்யில் உள்ளது. அடுத்து ஆஸ்கர் விருதினையும் வென்றுவிடுமென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமான நிலையத்தில் 1.27 கோடி கஞ்சா, அரியவகை ஆமைகள் பறிமுதல்: 3 போ் கைது

மக்கள் குறைதீா் கூட்டம்: 269 மனுக்கள் ஏற்பு

மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து

‘முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் நவ. 6, 7-இல் வழங்க ஏற்பாடு’

வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT