செய்திகள்

சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு குறித்து சமந்தா ட்வீட்! 

நடிகை சமந்தா சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் வைரலாகி வருகிறது. 

DIN

தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யசோதா திரைப்படம் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. சாகுந்தலம் ஏப்.14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் வருந்தவான் படத்திலும் நடித்து வருகிறார். 

தெலுங்கில் ‘ஏ மாய சேஷாவே’ எனும் படத்தில் சமந்தா முதன்முறையாக நடித்திருந்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படம் பிப்.26, 2010ஆம் ஆண்டு வெளியானது. இன்றுடன் 13 வருஷங்கள் ஆகிறது. இந்தப் படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என தமிழிலும் எடுக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர். 

இது குறித்து நடிகை சமந்தா கூறியதாவது: 

உங்களுடைய அன்பை புரிந்து கொள்கிறேன். இதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதும், நான் என்னவாக இருக்கிறேனோ அது உங்களால்தான். 13 ஆண்டுகள் ஆகிறது நாம் இப்போதுதான் தொடங்குகிறோம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT